“போற போக்குல பேசிடுவாரு” – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை, கடந்த 15-ஆம் தேதி அன்று, திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களின் சொத்து விவரங்கள் என்ற பட்டியலை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2,010 கோடி என்று தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி என்று ஒருவர் கூறியுள்ளார். உண்மை என்ன என்பது, மற்ற தயாரிப்பாளர்களுக்கே தெரியும். போகிற போக்கில் எதையாவது பேசிட்டு போயிடுறாங்க” என்று அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News