உக்ரைன் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யா, சண்டையில் கைப்பற்றிய அந்நாட்டின் 4 நகரங்களை அண்மையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
அத்துடன் போர் தாக்குதல்களையும் வேகப்படுத்தியுள்ள ரஷ்யா, உக்ரைனின் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதனை ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. அணுஆயுதங்களை பயன்படுத்தினால், போர் குற்ற தொடர்பான சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு இலக்காக நேரிடும் என்றும், ஜி-7 நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐ.நாவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தும்படி ரஷ்யா கூறிய நிலையில், வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று இந்தியா உள்பட 107 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இதனால் ரஷ்யான் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.