மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்தனர்.
அதிகாலை 3 மணியளவில் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இதில் லாரி டிரைவரும் பேருந்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.