இலங்கையின் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் பிரபல போதை பொருள் வியாபாரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்பாய் செல்வபுரம் பகுதியில் போதை பொருள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக யாழ்பாணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையெடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், கரந்தன் சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுக்கொண்டிருந்த இளைஞரை சோதனை செய்த போது, அவரிடம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் இருந்த 5 கிராம் எடைக்கொண்ட ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.