12 மணி நேர வேலை விவகாரம் : தமிழிசை ஆதரவுக்கு அதிமுக கண்டனம்..!

புதுச்சேரி அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர் சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன். 8 மணிநேர வேலை என்பது உலகம் முழுவதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 12 மணிநேர வேலை என்ற சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டத்தில் தாக்கல் செய்துள்ளது கண்டிக்க தக்கது.

கார்ப்ரேட் முதலாளிகளுக்காக திமுக இந்த சட்டத்தை கொண்டு வருகிறது. மீண்டும் ஒரு தொழிலாளர் அடிமை தனத்தை தமிழக முதல்வர் துவக்கியுள்ளார். இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆதரவு அளித்துள்ளார். அவரது கருத்துக்கு அதிமுக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஒருபுறம் நாட்டு பிரதமரின் அத்தனை செயல்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்து அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு துணை நிலை ஆளுநர் துணை நிற்க வேண்டிய காரணம் என்ன ? இது சம்பந்தமாக பாஜக நிலைப்பாடு என்ன.? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

புதுச்சேரியில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற மசோதாவை கொண்டு வர முன்னோட்டமான கருதுகிறாரா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. இது போன்ற தொழிலாளர் விரோத சட்ட மசோதா புதுச்சேரியில் கொண்டு வரப்பட்டால் புதுச்சேரி அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

RELATED ARTICLES

Recent News