இப்படி மாட்டிகிட்டியே பங்கு..! திருடிய இடத்திலேயே விற்க வந்த திருடர்கள்…!

பெரம்பலூர் அருகே மது போதையில் திருடிய இடத்திலேயே விற்க வந்த திருடர்களை கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்.

பெரம்பலூர் அருகே மது போதையில் திருடிய இடத்திலேயே விற்க வந்த திருடர்களை கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்.

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளைத்தைச் சேர்ந்த பிரதாப் என்பவர் பெரம்பலூர் பைபாஸ் சாலையில் பொக்லைன் எந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கடந்த 26-ம் தேதி மர்ம நபர்கள் சுமார் 10-ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பியை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பட்டறையின் உரிமையாளர் பிரதாப் போலிசாரிடம் புகார் அளிக்கமலே ,மறைமுகமாகவே திருடியவர் யார் என விசாரித்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் 2-நாள் கழித்து திருடிய இடத்திலேயே, 2-பேர் ஆட்டோவில் பட்டறைக்கே வந்து திருடிய காப்பர் கம்பியை விற்க வந்துள்ளனர்.

பின்னர் பட்டறையின் உரிமையாளர் காப்பர் கம்பியை வாங்கி பார்த்தபோது, பட்டறையின் பெயர் அச்சிடப்பட்டிருந்ததை அதிர்ச்சியடைந்தார். இரண்டு பேரையும் விசாரித்து, கையும் களவுமாக பிடித்துபோலீஸாரிடம் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த போலிசார் திருடியவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மோகன கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்ததுள்ளது. இவர்கள் கூட்டு களவானிகள் என்றும், பகலில் பழையத் துணி வாங்குவதையும், இரவில் திருடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது. அது மட்டுமில்லாமல் அவர்கள் வைத்திருக்கும் ஆட்டோ, சென்னையில் உள்ள ஒரு ஆசிரமத்தின் முகவரியில் இருப்பதைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் வழக்குபதிந்து கைது செய்து விசராணை நடத்திவருகின்றனர். குடிபோதையில் திருடிய இடத்திலேயே, திருடப்பட்ட பொருளை விற்கவந்த இச்சம்பவம் கேட்பவரை சிரிப்புக்குள்ளாகியுள்ளது.