16 வயது சிறுமியை 7-வது திருமணம் செய்த 65 வயது முதியவர்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!

65 வயதாகும் முதியவர் ஒருவர், 16 வயது சிறுமி உட்பட, 7 பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம், பிரேசில் நாட்டில் நடந்து, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், அந்த நபர், அரவுகாரியா என்ற பகுதியின் மேயராக இருந்து வருபவராம்..

பிரேசில் நாட்டில் பரானா மாகாணத்தில் உள்ள அரவுகாரியா நகராட்சியின் மேயராக செயல்பட்டு வந்தவர் இசாம் உசேன். கடந்த 2000-ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், குற்றமற்றவர் என்று நிரூபித்த பின்னர், அந்த வழக்கில் இருந்து விடுதலையானார்.

இதுவரை 6 பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ள இவருக்கு, 16 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மிஸ் அரவுகாரியா என்ற அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்துக் கொண்ட 16 வயது சிறுமி, இரண்டாது இடம் பெற்றார்.

அந்த சிறுமியின் மீது காதல் கொண்ட கொண்ட இசாம் உசேன், அவரை 7-வது திருமணம் செய்துக் கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு, தனது மேயர் பதவியையும் அவர் ராஜீனாமா செய்துள்ளார்.

65 வயதாகும் முதியவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம், நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இதற்கு அந்நாட்டு சட்டம் எப்படி அனுமதி அளிக்கிறது” என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News