பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண், தனது 11 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது நபரிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய கடனாக பெற்றிருந்தார். நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி கொடுக்க முடியாமல், அந்த பெண் தவித்து வந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 40 வயது நபர், 2 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, மகளை திருமணம் செய்து வைக்கும் படி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், திருமணமும் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறைக்கு சென்ற அந்த பெண், “என் மகளை படிக்க வைக்கிறேன் என்று கூறி அழைத்த சென்ற நபர், அவரை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டுள்ளார்” என்று கூறி, புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினா், விசாரணை நடத்தி வந்தனர். அதில், “என் தாயின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது.
கடனுக்காக அவர் தான் என்னை திருமணம் செய்து வைத்தார்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.