டெங்கு, சிக்கன்குனியா மக்களிடையே ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு!

புதுச்சேரி சுகாதார துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா குறித்து மக்களிடையே ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை சுகாதாரத்துறை இயக்குனர் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

புதுச்சேரியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா காய்ச்சல் பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக டெங்கு மற்றும் சிக்கன்குனியா குறித்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் மற்றும் ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்ட 10 ஆட்டோகள் அடுத்த 3 நாட்களுக்கு புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விலம் வர உள்ளன.

முன்னதாக இந்த ஆட்டோக்கள் இன்று காலை சுகாதார இயக்குனரக வளாகத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விழிப்புணர்வு வாகனங்களை சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

RELATED ARTICLES

Recent News