நோட்டோ நாடுகளின் படையை வெளியேற்றச் சொல்லி, உக்ரைன் நாட்டிடம் ரஷ்யா கூறி வந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த உக்ரைன், தொடர்ந்து அப்படைகளை, தங்களது நாட்டிற்குள் இருக்க, அனுமதி வழங்கப்பட்டது. இதனால், உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா போர் தொடுத்தது.
இந்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவிற்கு ஆதரவாக சில நாடுகளும் இருந்தனர். இந்திய மட்டும் தான், இரண்டு நாடுகளுக்கும் ஆதரவாக பேசி வந்தது. இதனால், உக்ரைன் நாட்டு அரசாங்கத்திடம் நல்லுறவு இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய கடவுளான காளியின் உருவப்படத்தை, உக்ரைன் நாட்டு அரசாங்கம் ஆபாசமாக சித்தரித்துள்ளது.
அதாவது, உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் தளத்தில், வெடிகுண்டு வெடிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்ததாக, அந்த வெடிகுண்டு வெடித்த இடத்தில், இந்து மதக் கடவுள் காளி, ஆபாசமாக நிற்பது போல் எடிட் செய்து, இன்னொரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
ஹாலிவுட் நடிகை மெர்லின் மாண்ட்ரோவின் புகைப்படத்தை மாற்றி, இவ்வாறு எடிட் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த இந்தியர்கள், தங்களது கண்டனங்களை அந்த பதிவில் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து, தங்களுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.
ஆனால், அதற்குள் அந்த பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்த நெட்டிசன்கள், இணையத்தில் வெளியிட்டனர். “போரின் போது ஆதரவு தெரிவித்த நாட்டின் கலாச்சாரத்தையே இப்படி அசிங்கப்படுத்துகிறீர்களே” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.