தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பா.ரஞ்சித். தரமான திரைப்படங்களை இவர் எடுத்திருப்பினும், அதற்கான அங்கீகாரம், பெரிய அளவில் கிடைத்ததேயில்லை. மக்கள் மத்தியில் திரைப்படம் வெற்றி பெற்றாலும், விருதுகள் விஷயத்தில், பா.ரஞ்சித்துக்கு தோல்வி தான்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது கூட, நல்ல திரைப்படங்களை எடுத்தும் எனக்கு விருது கிடைத்ததில்லை. அதில் எனக்கு பெரிய வருத்தமும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், உள்நாட்டில் விருதுகள் எதுவும் கிடைக்காத விரக்தியில், பா.ரஞ்சித் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது, நடிகர் விக்ரமை வைத்து, தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். 1840-ஆம் ஆண்டு முதல் 1940 வரை நடந்த வரலாற்று சம்பவங்களை வைத்து, இந்த படத்தை உருவாக்கி வருகிறார். தரமான முறையில் உருவாகி வரும் இந்த படத்தை, ஆஸ்கர் உள்ளிட்ட வெளிநாட்டு விருது விழாவுகளுக்கு அனுப்பி வைக்க, பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளாராம்.
குறிப்பாக, இந்த படம் ஆஸ்கர் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். உள்நாட்டில் விருதை பெற முடியாத பா.ரஞ்சித், அயல்நாட்டில் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..