மணிப்பூர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு…இன்டர்நெட் சேவைகள் முடக்கம்

மணிப்பூரில் மாநிலத்தில் உள்ள மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருதரப்பும் தங்களது கோரிக்கைகளையும் எதிர்ப்பையும் முன்வைத்து மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மணிப்பூரின் பல மாவட்டங்களில் குக்கி இனத்தவர், மைத்தேயி இனக்குழுவினரை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர். தெருக்களில் இருந்த கார்கள், பைக்குகள், கடைகளுக்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இந்த மோதல், மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியது.

இதனை தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு 144 உத்தரவு போடப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பான வீடியோக்கள், போலி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News