தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் மெட்டு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் தேன்சிட்டு பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரிய மாடு என ஆறு வகையான மாடுகள் பங்கேற்றன.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டி போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் சீறிப் பாய்ந்து வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த இரட்டை மாட்டு வண்டி வீரர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் முதல் 30 ஆயிரம் வரை ரொக்க பரிசுகளை வழங்கினார்கள்.