குஜராத்தில் 41 ஆயிரம் பெண்களை காணவில்லை…வெளியான அதிர்ச்சி தகவல்..!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

2016-ல் 7,105 பெண்கள், 2017-ல் 7,712 பெண்கள், 2018-ல் 9,246 பெண்கள், 2019-ல் 9,268 பெண்கள் 2020இல் 8,290 பெண்கள் என மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

சிறுமிகள் மற்றும் பெண்கள் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு விபச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்களா என்று விசாரித்து வருவதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில், பெண்கள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம், சட்டவிரோதமாக கடத்திச்சென்று வேறு மாநிலத்திற்கு கொண்டு விற்பனை செய்வதாகக் கூறினார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News