சினிமா
ப்ளாக் பஸ்டர் இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்-பாஸ் அசீம்!
சின்னத்திரையில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் அசீம். சமீபத்தில் நடைபெற்ற பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துக் கொண்டு, டைட்டில் பட்டமும் வென்றிருந்தார்.
இந்நிலையில், இவர் புதிய படம் ஒன்றில், ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில், அடுத்து ஒரு படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில், அசீம் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், அசீமுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login