பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவத்தை விலைக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். குறிப்பாக புளுடிக் ஆப்சனை தொடர்ந்து வைத்துக்கொள்வதற்குக் கட்டணம் நிர்ணயித்தார். ஊழியர்களுக்கு வேலை நேரத்தை அதிகரித்தார்.

இந்நிலையில் ட்விட்டர் பயனாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான யூசர்கள் தங்களது ட்விட்டரை மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் கணக்குகளையும் ஆர்ச்சிவ் லைனுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் தொடர்ந்து ஆறு மாதங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகள் செயல்படாத கணக்குகளாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த அவகாசம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.