கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெரும்…தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் போட்டியிட்டுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்னும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான கருத்து கணிப்புகள் வெளியானது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

ரிபப்ளிக் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜக 84 – 100 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் 94- 108 வரையிலும், மஜத 24 – 32 தொகுதிகள் வரையிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜீ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 103 ல் இருந்து 118 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பாஜக 79 ல் இருந்து 94 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் ஜேடிஎஸ் 25 ல் இருந்து 33 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

டிவி9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட் உடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி 88 முதல் 98 இடங்கள் வரையிலும் காங்கிரஸ் கூட்டணி 99 முதல் 109 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என்றும் மதசார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 26 இடங்கள் வரையிலும் வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ்- நவ் நடத்திய கருத்துக் கணிப்பில், ” காங்கிரஸ் கட்சி 106 முதல் 120 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News