மாவீரன், நான் ஈ, பாகுபலி, RRR ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜமௌலி. பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுத்து, தென்னிந்திய சினிமாவை, உலகம் முழுவதும் தலை நிமிர வைத்த இவர், அடுத்ததாக, மகாபாரதம் என்ற காவியத்தை திரைப்படமாக எடுக்க உள்ளாராம்.
இந்நிலையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில், ராஜமௌலி கலந்துக் கொண்டபோது, மகாபாரதம் கதையை எத்தனை பாகங்களாக எடுக்க உள்ளீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்த கதையை திரைப்படமாக எடுத்தால், நிச்சயம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு, 10-ல் இருந்து 12 வருடங்கள் வரை எனக்கு தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது நிஜமாக நடக்குமானால், காலத்தால் அழியாத காவியமாக, அந்த திரைப்படம் இருக்கும் என்பதில், அந்த ஐயமும் இல்லை..