செல்போன் மோகம்.. ரயில் மோதி உயிரிழந்த இளம்பெண்..

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில், 3 -ஆம் ஆண்டு படித்து வந்தவர் கிருத்திகா. பெருங்களத்தூரில் வசித்து வந்த இவர், தினமும் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்றும் கல்லூரி முடிந்த பின், ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, செல்போன் பயன்படுத்திக் கொண்டே தண்டவாளத்தை கடந்த அவர், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News