மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வை 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் இன்று10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. வழக்கம்போல சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் https://results.cbse.nic.in/என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.