பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பு..அலறியடித்து ஓடிய பாஜகவினர்..!

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது. இதனால், அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் அலறியடித்து வெளியே ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஜக அலுவலகத்தில் இருந்த நாகப்பாம்பை மீட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பாஜக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News