கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 132 இடங்களிலும் பாஜக 66 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு உற்சாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு வெடித்தும் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.