18 நகரங்களில் சதம் அடித்த வெயில்.. முதலிடத்தில் எந்த ஊர் தெரியுமா?

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. தற்போது, படிப்படியாக ஏறி வரும் வெயிலின் அளவு, மே மாதத்தில் தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. இந்நிலையில், 18 நகரங்களில், 100- டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகி, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, சென்னை மீனம்பாக்கம் பகுதியில், அதிகபட்சமாக 108 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்த படியாக, வேலூர், திருத்தனி, சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில், 107 டிகிரி செல்சியஸ் அளவில், வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் 105 டிகிரியும், கடலூர், ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் 104 டிகிரியும், வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு, மதுரை நகரம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பத்தூர், தருமபுரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில், இந்த வெப்பநிலையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News