விஜய் தப்பிச்சிட்டாரு.. சிவகார்த்திகேயன் மாட்டிக்கிட்டாரு.. ஏமாற்றம் அடைந்த படக்குழுவினர்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் ஷீட்டிங் சமீபத்தில், காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று, முடிந்தது. தற்போது, லியோ படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்தி கேயனின் 21-வது படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடக்க இருந்தது. ஆனால், தற்போது, அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு, அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். அதாவது, டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடக்க உள்ளது.

இதன்காரணமாக, காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் அது சம்பந்தமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும், அந்த படக்குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஸ்ட் மிஸ்ஸில் லியோ படக்குழுவினர் தப்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News