மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் குடிபோதையுடன் பைக்கில் வந்துள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரெனெ அந்த நபர் வண்டியில் வைத்திருந்த மது பாட்டிலை சாலையில் போட்டு உடைத்தார். சாலையில் படுத்து உருண்டு அங்க பிரதட்சனம் செய்து ரகளையில் ஈடுபட்டார். அந்த இளைஞர் என் வண்டியை கொடுங்க.. என்னிடம் பறித்த ஆவணங்களை கொடுங்க..என கேட்டுள்ளார்.
போலீசார் எவ்வளவோ கெஞ்சியும் அந்த நபர் கேட்கவில்லை. இறுதியில் ஒரு வழியாக எல்லா ஆவணங்களையும் தந்து விடுகிறோம் என கூறிய பிறகு அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். வாகன சோதனை நடத்தியது தப்பா? என்ற புலம்பியபடி போலீசார் தங்களது பாதுகாப்பு பணியை தொடர்ந்தனர்.