“ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மெரினாவில், மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதனை உலகம் முழுவதும் உள்ள அனைவரும் பார்த்து, ஆச்சரியம் அடைந்தனர். மாபெரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு பிறகு, அவசர சட்டம் கொண்டு வந்து, தடை மீண்டும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த அவசர சட்டத்தினை எதிர்த்து, விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. இறுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அன்று, தேதி குறிப்பிடாமல், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வாசித்தார். அதில், “ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை.. ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாச்சாரத்தோடு, ஒன்றிணைந்து உள்ளதால், அதனை தடை செய்ய முடியாது.

இதில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு போட்டியின் விதிமுறைகள், முறையாக பின்பற்றப்படுவதை, மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். எனவே, ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News