Connect with us

RajNewsTamil

சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. முக்கிய வீரர் விலகல்.. Cup முக்கியம் பிகிலு..

விளையாட்டு

சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. முக்கிய வீரர் விலகல்.. Cup முக்கியம் பிகிலு..

2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தற்போது, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரத்துடன், லீக் போட்டிகள் முடிவடைய உள்ளன. இருப்பினும், ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாட, எந்த அணியும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சென்னை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதில் வென்றால், ப்ளே ஆஃபில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தோல்வி அடைந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து முடிவுகள் மாற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரராக உள்ள பென் ஸ்டோக்ஸ், தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜூன் ஒன்றாம் தேதி அன்று, இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான, டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் கலந்துக் கொள்வதற்காக, பென் ஸ்டோக்ஸ் தாயகம் திரும்ப உள்ளார். 11.25 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ், சென்னை அணிக்காக, கடைசி லீக் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை அணியின் வெற்றியில், சில சோதனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

Click to comment

You must be logged in to post a commentLogin

Leave a Reply

More in விளையாட்டு

To Top