மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கோபால்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் சோனு சர்மா. இவருக்கும், இவரது மனைவி வர்ஷா சர்மாவிற்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, சட்டப்படி விவாகரத்து செய்துக் கொள்ள முடிவெடுத்து, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தபோது, இந்த ஜோடியை சேர்த்து வைக்க வேண்டும் என்று நீதிபதி முடிவெடுத்தார்.
இதையடுத்து, வாழ்க்கை என்றால் என்ன என்றும், ஒருவரை ஒருவர் நம்புவது எவ்வளவு முக்கியமானது என்றும், ஜோடியினருக்கு நீதிபதி எடுத்துரைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட சோனுவும், வர்ஷாவும், மீண்டும் இணைய முடிவு எடுத்தனர். வாழ்க்கை பற்றிய புரிதலை கொடுத்து, பிரிந்து கிடந்த இளம் ஜோடியை, நீதிபதி சேர்த்து வைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.