“உடல் உறுப்பு பெரிதாக ஹார்மோன் ஊசி.. பெரிய பெண் ஆனது இப்படி தான்” – பொங்கி எழுந்த ஹன்சிகா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் தனது தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை பற்றி கூறி வரும் நீண்ட நாள் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருந்தார். அதாவது, நடிகை ஹன்சிகா சிறு வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடித்துவிட்டார். ஆனால், அப்போதே பெரிய பெண்ணுக்கான வளர்ச்சி அவருக்கு இருந்தது.

இதனை பார்த்த சிலர், ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டு தான், பெரிய பெண்ணாக அவர் மாறியுள்ளார். இதனால் தான் பெரிய பெண் போல், அவருக்கு உடல் உறுப்புகளின் வளர்ச்சி உள்ளது என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதற்கு தற்போது பதில் அளித்துள்ள ஹன்சிகா, “ஊசி போட்டுக் கொள்வதற்கே நான் பயப்படுவேன். இதனால் தான் இதுவரை நான் டேட்டூ-வே குத்திக் கொண்டதில்லை.. அப்படி இருக்கும்போது, நான் எப்படி ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

“என்னுடைய ஆரம்பக் காலங்களில் இதுபோன்ற வதந்திகளால், மிகவும் வருத்தப்பட்டேன்” என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News