கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.
காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும் டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.