Connect with us

Raj News Tamil

தளபதி 68-ல் விஜய்க்கு வில்லன் இவரா? ரொம்ப மோசமானவராச்சே? அப்ப கண்டிப்பா அனல் பறக்கும்!

சினிமா

தளபதி 68-ல் விஜய்க்கு வில்லன் இவரா? ரொம்ப மோசமானவராச்சே? அப்ப கண்டிப்பா அனல் பறக்கும்!

லியோ படத்தின் ஷீட்டிங்கில் விஜய் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, பின்னணி பணிகளை தொடங்க படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். இதற்கிடையே, தளபதி 68 படத்தின் அறிவிப்புகள், நேற்று வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்தது.

அதாவது, இயக்குநர் வெங்கட் பிரபு தான், விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். இவ்வாறு இருக்க, இந்த படம் தொடர்பான இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் நடிக்க உள்ளாராம். கொடுக்கும் கதாபாத்திரங்களை வேற லெவலில் பர்ஃபார்மென்ஸ் செய்து அசத்துக் கூடிய இவர், விஜயுடன் இணைய உள்ளார் என்றதும், ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, மாநாடு படத்தின் மூலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் நல்ல அறிமுகம் உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, தளபதி 68 திரைப்படம், ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top