சட்டையின் முன் பக்கத்தில் கேமரா…இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது..!

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் ஹைவே பேட்ரோல் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு சட்டையின் முன்பக்கத்தில் பொருத்திக் கொள்ளும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் குற்ற சம்பவத்தை தடுப்பதற்காகவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சரியான ஆதாரத்துடன் வழக்கு தொடர இந்த கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா கலந்து கொண்டு மாநகர மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு கேமராவை வழங்கினார்.

திருச்சி மாநகரில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News