கேரளா மாநிலத்தில் 15 வயது சிறுமிக்கு, அவரது உடன் பிறந்த சகோதரன் பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளான். தொடர்ந்து இவ்வாறு அத்துமீறி நடந்துக் கொண்டதில், அந்த கர்ப்பம் அடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க, நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.
இந்த மனு, கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க, மருத்துவ வாரியத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட மருத்துவ வாரியம், அதனை தீர ஆராய்ந்து, தங்களது தரப்பு அறிக்கையை வெளியிட்டது.
அதில், இந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தால், பல்வேறு சமூக சிக்கல்கள் ஏற்படும் என்றும், பதின் பருவத்தில் ஏற்படும் கர்ப்பத்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த சிறுமிக்கு மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்து வாரியத்தை அறிக்கையை பார்த்த நீதிமன்றம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், “அந்த சிறுமி குழந்தையை பெற்றெடுத்தால், பல்வேறு சமூக மற்றும் மருத்துவ சிக்கல்கள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு, சிறுமியின் கருவை நிறுத்த அனுமதி வழங்குகிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, சிறுமியின் கர்ப்பத்தை காலதாமதமின்றி கலைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அலுவலர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.