திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, போக்குவரத்துத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பு, பெரும் பாராட்டுக்களை பொதுமக்கள் மத்தியில் பெற்றது.
இவ்வாறு இருக்க, இன்னொரு முக்கியமான அறிவிப்பை, தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டு அரசின் கீழ் போக்குவரத்துக் கழகங்களின் கீழ், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த பேருந்துகளில், 3 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு, டிக்கெட் பெற வேண்டிய தேவையில்லை.
அந்த வயது வரம்பு தற்போது, 5 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.