நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். தற்போது த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது.

இது குறித்து விஜய்யிடம் கூறியதற்கு, சென்னை வேண்டாம் தென் தமிழகத்தில் இருக்கும் என் ரசிகர்களை பார்க்க விரும்புகிறேன். இதனால் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி தான் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர். இதனால் அவரை பார்க்க வரும் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என கூறப்படுகிறது.