11 மாவட்டங்களில் வெள்ள அபாயம் – எச்சரிக்கை!!!

மேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மாற்று பாதையில் மறுகரைக்கு சென்று வருகின்றனர். வருவாய் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை, கொள்ளிடம் வெள்ளப் பெருக்கு ஆகியவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பாக, மயிலாடுதுறையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என, ஆட்சியர் லலிதா அறிவுறுத்தினார். காவிரியில் உபரிநீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர 11 மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News