உலகின் துன்பமான நாடுகள் பட்டியல்…முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கே தனது வருடாந்திர துன்ப குறியீட்டை வெளியிட்டுள்ளார். துன்பக் குறியீடு என்பது ஆண்டு இறுதி வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வங்கிக் கடன் விகிதங்களின் மற்றும் தனிநபர் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.

157 நாடுகளை ஆய்வு செய்த பிறகு இந்த துன்பக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜிம்பாப்வே முதல் இடத்தில் உள்ளது. பணவீக்கம், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களால் ஜிம்பாப்வே இந்த நிலைக்கு வந்துள்ளது.

ஜிம்பாப்வே தவிர, வெனிசுலா, சிரியா, லெபனான் மற்றும் சூடான் ஆகிய நாடுகள், இந்த பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 103 வது இடத்திலும் அமெரிக்கா 134 வது இடத்திலும் சுவிட்சர்லாந்து 157 வது இடத்திலும் உள்ளது.

RELATED ARTICLES

Recent News