பள்ளிகள் திறப்பு எப்போது? புதிய தேதி இதுதான்?

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, கோடை விடுமுறை வழங்கப்பட்டது. கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட விடுமுறை, இந்த மாத இறுதியோடு முடிவடைய உள்ளது.

அதாவது, 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை, 1-ஆம் தேதியும், 1-ல் இருந்து 5-ஆம் வகுப்பு வரை, 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக, முன்பு கூறப்பட்டது.

ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக, மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி, ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் முடிவில், பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் 7-ஆம் தேதி அன்று, பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும், எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News