பீகார் மாநிலம் கிசன் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, கணவரது ஊரிலேயே, தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக, கணவரை காணவில்லை என்று, அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளிக்க சென்றுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட காவல்நிலைய அதிகாரி நீரஜ்குமார், கணவரை கண்டுபிடிக்கும் வரை, காவல்நிலையத்திலேயே இருக்கும்படி, அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு 8 நாட்கள் அங்கு தங்கிய அந்த பெண்ணுக்கு, நீரஜ்குமார் பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். அவர் மட்டுமின்றி, அந்த ஊர் தலைவரும், அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இறுதியில், அந்த பெண்ணின் கணவரை, நீரஜ் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த கிளம்பிய தம்பதியினர், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையில், பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தங்கள் மீது கடுமையான வழக்கு பாயும் என்பதால் நீரஜ்குமாரும், அந்த ஊர் தலைவரும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை கைது செய்வதற்கு, காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.