நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த 24ம் தேதி பெண் டாக்டர் ஒருவர் தங்களின் மத வழக்கப்படி நைட் ஹிஜாப் அணிந்து பணியில் இருந்துள்ளார்.
அப்போது மருத்துவமனைக்கு வந்த புவனேஷ் ராம் என்ற பாஜக நிர்வாகி “நீங்க டியூட்டில இருக்கீங்க. உங்க யூனிஃபார்ம் எங்க? நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க? ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்காங்க? என அந்த மருத்துவரை மிரட்டியுள்ளார். மேலும் அநாகரிகமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த புவனேஷ் ராமை கைது செய்துள்ளனர்.