பொருளாதார துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் தான் ஆனந்த் சீனவாசன். சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது பேசி வரும் இவர், ஏழை மக்களுக்கான சிறந்த முதலீடு என்பவது தங்கம் தான் என்று கூறி வருகிறார்.
குறிப்பாக, அனைத்து மக்களும், 400 கிராம் அளவிற்கு தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில், இவரிடம் முக்கிய கேள்வி ஒன்றை பொதுமக்கள் கேட்டுள்ளனர். அதாவது, கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சமீபத்தில் கூட, சவரனுக்கு ரூ.200 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. எனவே, இது தங்கம் வாங்க சரியான நேரமா? அல்லது நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை இன்னும் குறையுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் சீனிவாசன், “தங்கம் வாங்குவதற்கான சரியான நேரம் இதுதான்.. நாட்கள் செல்ல செல்ல இன்னும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. வரும் 18 மாதங்களுக்கு, தங்கத்தின் விலை குறைய தான் அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.