ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் ஹோலம்ரேஸா அர்தேஷிரி. இவர் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார். இவருடைய வாழ்நாளில் உணவை தொட்டு கூட பார்த்தது இல்லையாம்.
கோலா, பெப்ஸி பானங்களை மட்டுமே அருந்தி வருவதால் இவருக்கு பசி உணர்வே வருவதில்லையாம். இதை பற்றி அவரிடம் கேட்ட போது “எந்த காரணமும் இல்லாமல் திடீரென்றுதான் இந்தப் பழக்கம் ஏற்பட்டது. இப்போது வரை என்னால் காரணத்தை கண்டறிய முடியவில்லை என கூறியுள்ளார்.
எனது வாயில் தடித்த முடி இருப்பது போல உணர்கிறேன். முடியின் ஒரு பகுதி வாயிலும், மற்றொரு பகுதி என் வயிறு வரையிலும் நீண்டு இருப்பதைப் போல என்னால் உணர முடிகிறது. என்னுடைய பிரச்சினையை மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உணவை பார்த்தால் குமட்டல் வந்துவிடுவதாகவும் இரவில் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.