2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி, கடந்த திங்கள் கிழமை அன்று நடந்தது. இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு உதவிய முக்கியமானவர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா.
இந்த வெற்றியின் மூலம், சென்னை ரசிகர்களின் மனதை, ஜடேஜா வென்றுவிட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில், ஜடேஜாவுக்கு பிடித்த தமிழ் பாடல் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, வானத்தை போல படத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் தான், ஜடேஜாவுக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலாம். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது, இந்த பாடலை தான், அவர் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.
சென்னை அணியின் இறுதி போட்டியில் கூட, இந்த பாடலை டி.ஜே. ஒலிக்க வைத்திருப்பார். இதனைக் கேட்ட ஜடேஜாவும், Vibe-ஆகியிருப்பார். இதுதொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.