நாட்டை உலுக்கிய பயங்கர ரயில் விபத்து..தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் பலி..!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் என்ற பகுதியில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 238 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்புப் பணியில் 7 தேசிய மீட்பு குழு படையினர், 5 ஒடிசா மாநில மீட்பு குழு படையினர், 24 தீயணைப்பு வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார், தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 35 பேர் பலியானதாக வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News