ஒடிசா மாநிலத்தில் நேற்று பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : இப்போது நமக்கு தெரிகிறது, வேகமாக சென்ற அந்த ரயில், அந்த தண்டவாளத்தில் சென்று இருக்க வேண்டிய ரயிலே இல்லை. அந்த தண்டவாளமே மெதுவான ரயில்களுக்கானது. ஆகவே, ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
பிரதமர் சொன்னால்தான் செய்வேன் என்று இருக்கக் கூடாது. பொருத்தமற்ற , திறமையற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் மோடி உலக புகழ் பெற்றவர். அதற்கான விலையையும் அவர் கொடுத்து இருக்கிறார். அதற்கு மற்றொரு உதாரணம் மணிப்பூர்’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Now we know: The fast train that flew off the tracks to an oncoming train was never to be allowed on those tracks since the tracks were meant for a slower train. Thus Rail Mantri must resign without waiting for a nod from the PM. Of course Modi is world famous for recruiting…
— Subramanian Swamy (@Swamy39) June 4, 2023