இனி கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பஸ்ஸில் டிக்கெட் எடுக்கலாம்…நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளில் ஸ்மார்ட் போன் உள்ளது. அனைவரும் google pay, phone pay, paytm போன்ற செயலிகள் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.

இதுவரை கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த கியூ ஆர் கோர்டு வசதி, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் தனியார் பேருந்து ஒன்றில் டிக்கெட் எடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கண்டக்டர் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் சில்லறை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவையை சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. எந்த இடத்திற்கு எவ்வளவு கட்டணம் என்பதை நடத்துனரிடம் கேட்டு அதற்கான தொகையை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த கியூஆர் கோர்டு திட்டமானது, அந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News