ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் விஷால். இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித் என்ற இளைஞரும், நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அதீத வயிறு வலி காரணமாக, கடந்த 28-ஆம் தேதி அன்று, விஷால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தகவலை அறிந்த அஜித், நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து, நண்பனின் உடல் புதைக்கப்பட்ட பிறகும், அவரது நினைவிலேயே இருந்து வந்த அஜித், விபரீத முடிவை எடுத்தார். அதாவது, நண்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட அதே கயிற்றை எடுத்து, அஜித்தும் தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து, விஷாலின் உடல் புதைக்கப்பட்ட அதே இடத்திலேயே, அஜித்தின் உடலும் புதைக்கப்பட்டது. ஒருவரது பெயரை, மற்றொருவர், தங்களது இதயத்தில் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.