‘மார்கழி திங்கள்’ படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்..!!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர்க அறிமுகமாகிறார். இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘மார்கழி திங்கள்’ படத்தில் இயக்குனர் சுசீந்திரன், வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் ‘மார்கழி திங்கள்’ படத்தை தயாரித்தும் வருகிறார்.

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். இதனை தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஈஸ்வரன் உட்பட பல படங்களை இயக்கினார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கிய ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

RELATED ARTICLES

Recent News