சாலையில் விழுந்த பீர் பாட்டில் பெட்டிகள்….போட்டி போட்டு எடுத்த குடி மகன்கள்

ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த மினி லாரி திடீரென்று சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த வண்டியில் இருந்த சுமார் 200 பெட்டி பீர் பாட்டில்கள் சாலையில் விழுந்து புரண்டு ஓடின.

இதை பார்த்த குடி மகன்கள் போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவர்களிடம் இருந்து பீர் பாட்டில்களை வாங்கி பத்திரப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News