மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள மீரா ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சஹானி. 55 வயதாகும் இவர், சரஸ்வதி வைத்யா என்ற 32 வயதான பெண்ணுடன், லிவிங் டு கெதர் முறையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இந்த காதல் ஜோடியினர் வசித்து வந்த அறையில் இருந்து, கடந்த 3 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது. ஒரு கட்டத்தில் இந்த துர்நாற்றத்தை பொறுத்துக் கொள்ளாத அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, சரஸ்வதியின் உடல் பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டு, கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து, அந்த உடல் பாகங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மனோஜ் சஹானியை கைது செய்தனர்.
“எதற்காக கொலை செய்தார்?”, “எப்போது இந்த கொலை நடந்திருக்கும்?” உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில், காவல்துறையின் விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும்..